மோடி உத்தரவால் துரைமுருகன் வீட்டில் சோதனை: ஸ்டாலின் கொதிப்பு

மோடி உத்தரவால் துரைமுருகன் வீட்டில் சோதனை: ஸ்டாலின் கொதிப்பு

2 mins read
ab93bda4-9e02-40be-a4b4-7194aff6b0e5
-

மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன், 80, வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மகனுக்காக தொகுதி முழுவதும் துரைமுருகன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காட்பாடி காந்தி நகரிலுள்ள அவரது வீட் டுக்கு வெள்ளிக்கிழமை இரவு மூன்று பேர் சென்றுள்ளனர். வரு மான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிய அவர்கள் அதற்கான அடையாளத்தைச் சரியாகக் காட் டாததால் சோதனை நடத்த அனு மதிக்கப்படவில்லை. பின்னர் வருமான வரித்துறை அதிகாரி விஜய் தீபன் வந்து மூவரும் தங்களது துறையினர்தான் என்று உறுதியளித்ததும் நேற்று அதிகாலை துரைமுருகன் வீட்டில் சோதனை தொடங்கி காலை 8.30 மணி வரை நடைபெற்றது. அவரது மகன் நடத்தும் கல்லூ ரியிலும் துரைமுருகன் ஆதரவாளர் சக்கரவர்த்தி, 60, முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜன் ஆகியோரின் வீடுகளிலும் அதி காரிகள் சோதனை நடத்தினர். துரைமுருகன் வீட்டிலிருந்து ரூ.10 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாகவும் இரு பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப் பட்டதாகவும் ஊடகங்கள் கூறின. இந்நிலையில் வருமான வரித் துறை சோதனையை கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்ற உளவுத் துறை தகவலால் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்த பிரதமர் மோடியே தலையிட்டு வருமான வரித்துறை சோதனை நடத்த உத்தரவிட் டுள்ளார்," என்று கூறியுள்ளார். முன்னதாக, "என் வீட்டில் நடத் தப்பட்ட சோதனையைக் கண்டு அஞ்சமாட்டேன். மத்திய, மாநில அரசுகளுடன் உறவு வைத்திருக் கும் அரசியல்வாதிகள் பூச்சாண்டி காட்ட வேண்டாம்," என்று துரை முருகன் தெரிவித்திருந்தார்.