மாற்றுகிறது தேர்தல்; மாறுகிறது தமிழ்நாட்டின் அரசியல் களம்

மாற்றுகிறது தேர்தல்; மாறுகிறது தமிழ்நாட்டின் அரசியல் களம்

3 mins read
1c352781-239e-4834-8eb8-cfc1c1ecb6c1
-

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக் கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக் கும் வாக்களிப்பு நடக்கிறது. மொத்தம் 5.86 கோடி வாக் காளர்கள் வாக்களித்து தங்களை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத் திலும் பிரதிநிதிக்கப்போகின்ற பேராளர்கள் யார் என்பதை முடிவு செய்யப்போகிறார்கள். நாடாளுமன்றத்துக்கான 39 தொகுதிகளில் மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் குதித்து இருக்கிறார்கள். 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 269 பேர் போட்டி யிடுகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் முதன்முதலாக நடக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்ற இடைத்தேர்தல்களும் அந்த மாநிலத்தில் அரசியல் களத் தில் குறிப்பிடத்தக்க பெரும் மாற் றங்களை ஏற்படுத்தப்போகின்றன என்கிறார்கள் கவனிப்பாளர்கள். ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அதிமுகவைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சி இப்போது சட்டமன் றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் காலத்தை ஓட்டுகிறது. இந்த இடைத்தேர்தல் மூலம் அந்தக் கட்சிக்கு உயிர் கிடைத்து விடும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் சரியாக செயல்படாமல் போவதன் மூலம் புதுடெல்லியில் அதிமுகவுக்குச் செல்வாக்கு குறையப்போகிறது என்று அவர் கள் தெரிவிக்கிறார்கள். அதேவேளையில், அதிமுகவில் இருந்து பிரிந்து தனியாக களம் காணும் அமமுக குறிப்பிடத்தக்க கட்சியாக உருவெடுக்கும் என்றும் இதை வைத்துதான் அதிமுகவின் எதிர்காலம் அமையப்போவதாகவும் அவர்கள் கணிக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி இந்தத் தேர்தலுக்குப் பிறகு எடுப்பாக தெரியப்போகும் ஒரு கட்சியாக மிளிரும். அதேநேரத்தில் தேமுதிக வுக்குப் பெரும் பின்னடைவு ஏற் பட்டுவிடும். மாநிலத்தின் மிக முக்கிய கட்சியாகத் திகழும் திமுகவுக்குச் சட்டமன்றத்தில் இப்போது இருப் பதைவிட பலம் இன்னும் கூடும் என்றாலும் அதிமுக ஆட்சியை அதன் பதவிக்காலத்திற்குள் அகற் றும் அளவிற்கு திமுகவுக்கு இந் தத் தேர்தல் மூலம் வெற்றி கிடைக் காது என்பதே கவனிப்பாளர்களின் கணிப்பாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இப்போது ஓர் இடத்தைக்கூட கொண்டிராத திமுகவுக்கு இந்தத் தேர்தல் பலம் சேர்க்கும் ஒன்றாக இருக்குமென கவனிப்பாளர்கள் நம்புகிறார்கள். அந்தக் கட்சியில் இந்தத் தேர்தல் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று நிகழப்போகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் ராஜதந்திரங் களால் இதுநாள்வரை நாடாளு மன்றத்தில் இடம்பெற்று வந்த அவருடைய புதல்வியான கனி மொழி, இப்போது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நாடாளு மன்றத்திற்குச் செல்லப்போகிறார் என்றும் இனிமேல் அவர்தான் திமுகவின் புதுடெல்லி முகமாக இருப்பார் என்றும் கவனிப்பாளர் கள் கூறுகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை யில் தேசிய கட்சிகளான பாஜக வையும் காங்கிரசையும் ஒப்பிடுகை யில் காங்கிரசின் கை ஓங்கி இருக்கும் என்பதே அவர்களின் கருத்தாகவும் இருக்கிறது. இவை எல்லாம் இப்படி இருக்க, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி யைத் தொடங்கி அரசியலில் குதித்து இருக்கும் கமல்ஹாசன், இந்தத் தேர்தல் மூலம் பெரும் தோல்வி அடைவார் என்றும் அந் தத் தோல்வி திரைப்படத் துறை யினர் அரசியலுக்கு வருவதற்கு ஊக்கத்தைக் குறைத்துவிடும் என்றும் கருதப்படுகிறது. இதற்கு ரஜினிகாந்தும் விலக் கல்ல என்றும் கமல்ஹாசனுக்கு நேர்ந்த கதியை மனதில் வைத்து அவரும் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் கவனிப்பாளர்கள் துணிந்து கூறுகிறார்கள்.