இந்தியத் தேர்தல்: ஜனநாயகத் திருவிழா

இந்தியத் தேர்தல்: ஜனநாயகத் திருவிழா

4 mins read

எம்.கே.ருஷ்யேந்திரன்

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என்று கருதப்படும் இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மே மாதம் 19ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. அந்த நாட்டின் 17வது நாடாளுமன்றத் திற்கு 543 உறுப்பினர்களை சுமார் 90 கோடி மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க இருக்கும் நிகழ்ச்சி சுற்றுலா கவர்ச்சியாக வும் பரிணமித்து இருக்கிறது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 545 இடங்கள். அவற்றில் இரண்டு இடங்கள் அதிபரின் விருப்பப்படி நியமிக்கப்படும் உறுப்பினர்களுக்கு உரியவை. குறைந்தபட் சம் 272 இடங்களைக் கைப்பற்றும் கட்சி ஆட்சியை அமைக்கலாம் என்று அரச மைப்புச் சட்டம் கூறுகிறது. அந்த நாட்டில் நடக்க இருக்கின்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக மொத் தம் 2,293 அரசியல் கட்சிகள் தங்களைப் பதிந்துகொண்டு இருக்கின்றன. இருந்தாலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளின் தலைமையில் பற்பல கட்சிகளும் சேர்ந்து இரு பெரும் கூட்டணிகளை அமைத்து தேர்தலைச் சந் திக்கின்றன. இந்தியா மாபெரும் ஜன நாயக நாடு என்றாலும், அந்த நாடு 1947ல் சுதந்திரம் அடைந்தது முதல் இது வரையில் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் 50% வாக்குகள் பெற்றதே கிடையாது.

48% முதல் 20% வரை ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலை வராக இருந்தபோது 1951ல் நடந்த தேர் தலில்கூட அந்தக் கட்சிக்கு 50% வாக்கு கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் 1984ல் ராஜீவ் காந்தி தலைமையில் அந் தக் கட்சிக்கு 48% வாக்குகள் கிடைத் தன. ஆனால் அதே கட்சிக்கு 2014ல் 20% வாக்குகூட கிடைக்கவில்லை. பாஜக எனப்படும் பாரதிய ஜனதா கட்சி 1991ல் முதன்முதலாக 20% வாக்கு களைப் பெற்றது. 2014ல் அது பெற்ற வாக்குகள் 30%ஐ தாண்டியது. இப்போது நடக்க இருக்கும் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் 30% வாக்குகள் கிடைத்தாலே அது பெரும் சாதனையாகவே இருக்கும். ஆளும் பாஜக தன் சாதனைகளை விளம்பரப்படுத்தி மீண்டும் ஒருமுறை தனக்கு வாக்களிக்கும்படி வாக்காளர் களிடம் இப்போது வேண்டுகோள் விடுத்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் அந்தக் கட்சி, வலுவான அரசாங்கம் தேவை என்றால் இந்திய மக்கள் பாஜகவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. நாட்டின் பொருளியல் வளப்பத்தைச் சாதிக்கவும் ஊழலை ஒழிக்கவும் இந்தி யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாஜகதான் உதவ முடியும் என்று அந்தக் கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி பிர சாரம் செய்து வருகிறார். ஏராளமான அடிப்படை வசதிகள் முதல் துணைக்கோளத்தை அழிக்கும் அண்மைய ஏவுகணை சோதனைவரை பலதுறைகளிலும் நாட்டை முன்னேற்றி வருவதாகப் பறைசாற்றிவரும் பாஜக, இப் போதைய சூழலில் இந்தியாவுக்குப் பாஜக தான் பொருத்தமான தேர்வாக இருக்க முடியும் என்றும் திட்டவட்டமாக பிரசாரம் செய்கிறது. ஆனால் ஜிஎஸ்டி வரி, நாணய மதிப்பு இழப்பு, ரஃபேல் விமானம் ஊழல் என்று பலவற்றிலும் பாஜக இந்தியாவை, பொரு ளியலைப் பாழ்படுத்திவிட்டது என்றும் வங்கிகளில் இருந்து பெரும் பணத்தைத் தூக்கிக்கொண்டு பெரும் முதலைகள் நாட்டைவிட்டு வெளியேறியதை அந்தக் கட்சி கண்டும்காணாமல் இருந்து அனு மதித்துவிட்டது என்றும் காங்கிரஸ் தலை மையிலான எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. வலைத்தளங்கள் பெரும் பங்கு

இந்தத் தேர்தல் மூலம் இந்தியா மீண்டும் பாஜக வசம் போனால், நாட்டில் ஜனநா யகத்துக்கு ஆபத்து வந்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் சங்கு ஊதுகின்றன. பிரச்சினை என்று வரும்போது, எதிர்க் கட்சிகள் கேள்விகளை எழுப்பும்போது சமயக் காவலராக நடித்தும் பாகிஸ்தானை காரணம் காட்டியும் பாஜக தப்பிக்கப் பார்க்கிறது என்று புகார் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், பெரும் பெரும் நிறுவனங் களின் பேச்சைக் கேட்டு அவற்றின் எடு பிடியாக இருந்து, சிறு குறு தொழில்களை ஒழித்து, ஏழைகளை, வறுமையை அதிக மாக்கிவிட்ட பாஜக ஆட்சி அகலவேண் டும் என்றும் வசைபாடுகின்றன. ஏராளமான திட்டங்களை, வாக்குறுதி களை அள்ளிவீசிய பாஜகவும் மோடியும் கொடுத்த வாக்கைக் காக்கவில்லை என் றும் அவை ஒருமித்த குரல் எழுப்புகின்றன. ஆகையால் நாட்டில் முதலில் வறுமை ஒழியவேண்டும் என்று சொல்லி ஏழைக்கு மாதம் ரூ.6,000 என்ற ஒரு திட்டத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்து வருகிறது. இந்தத் தேர்தலில் சமூக வலைத்தளங்களில் கோடானுகோடி விளம்பரங்கள் செய்யப்பட்டும் பிரசாரங் கள் நடக்கின்றன. வாக்காளர்களும் அத் தகைய தளங்கள் மூலம் பலவற்றையும் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி தொடருமா? அல்லது காங்கிரஸ் ஆட்சி அமையுமா? என்பது மூன்று அம்சங் களைப் பொறுத்து இருக்கும். இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவின் செயல்திறன் எப்படி இருக் கிறது; நாட்டின் தென் பகுதியில் பாஜக அல்லாத கட்சிகள் எந்த அளவுக்கு வெற்றிகளைச் சாதிக் கின்றன; இந்தி பேசும் மாநிலங்களிலும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் தனக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைச் சரிக்கட்டும் வகையில் பாஜகவுக்கு என் னென்ன வாய்ப்புகள் ஏற்படும் என்பதே அந்த மூன்று அம்சங்கள் என்று கவனிப் பாளர்கள் கணிக்கிறார்கள். இந்தக் கணிப்புகள் உண்மையா என் பது மே 23ஆம் தேதி தெரியவரும்.