மனைவியாகக் கரம்பிடித்த காதலியை மூன்று மாதத்திலேயே குத்திக்கொன்ற கணவன்; சென்னை கேகே நகரில் பயங்கரம்

சென்னை: சென்னையில் கடந்த நான்கு நாட்களில் நாள்தோறும் ஒரு கொலை நடந்துள்ள நிலையில் நகரில் அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகளில் அச்சமும் பர பரப்பும் அதிகரித்து இருக்கின்றன.
கேகே நகரில் இளம் மாது ஒரு வர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தக் கொலை வரிசையில் ஆகக் கடைசியாக நிகழ்ந்து இருக்கிறது.
கேகே நகரைச் சேர்ந்த சந்தியா, 20, என்பவரும் அருள் குமார், 24, என்பவரும் காதலித்து மூன்று மாதங்களுக்குமுன் கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார்கள்.
மின்சார வேலை பார்த்து வந்த அருள் குமார், திருமணத்திற்குப் பிறகு மாமனார் வீட்டிலேயே மனைவியுடன் வசித்து வந்தார்.
மனைவி சந்தியாவைக் காத லித்து மணம் செய்துகொண்டார் என்றாலும் அவர் மீது அருள் குமாருக்கு அடிக்கடி சந்தேகம் வந்ததுண்டு.
இதன் காரணமாக அவர் களுக்கு இடையில் வாக்குவாதங் களும் சச்சரவுகளும் நிகழ்ந்து வந்துள்ளன. இந்த நிலையில், நேற்றும் அத்தம்பதிக்கு இடையில் சிறு பிரச்சினை காரணமாக வாக்குவாதம் மூண்டது. அருகே இருந்த மாமியார் சரிதா, அவர் களைச் சமாதானப்படுத்தினார்.
இருந்தாலும் மூர்க்கமாக மாறிய அருள் குமார், வீட்டிலிருந்து ஒரு கத்தியை எடுத்து மனை வியைக் குத்துவதற்கு முயன்றார். அதைத் தடுத்த மாமியாருக்குக் காயம் ஏற்பட்டது.
கோபம் அடங்காத அருள் குமார், கத்தியால் சந்தியாவைக் குத்தினார். தொண்டையில் பல மாகக் குத்தப்பட்ட சந்தியாவின் உடலிலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதை அடுத்து சிறிது நேரத்தில் சந்தியா உயிர் இழந்து விட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த பக் கத்து வீட்டுக்காரர்கள் அருள் குமாரைப் பிடித்து போலிசில் ஒப் படைத்தனர். அவரைக் கைது செய்து போலிசார் விசாரித்து வருகிறார்கள். சந்தியாவின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப் பட்டது.
சென்னையில் நான்கு நாட் களில் நான்கு கொலைகள் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன.
அரும்பாக்கத்தில் போக்கிரி ஒருவர் கொல்லப்பட்டார். அதை யடுத்து கொரட்டூரில் தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை செய் யப்பட்டார். அடுத்த கொலை நீலாங்கரையில் காருக்குள் அரங் கேற்றப்பட்டது. நான்காவதாக கேகே நகரில் நேற்று சந்தியா கொலை செய்யப்பட்டார்.
மாநிலத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், சட்ட அமலாக்க அதி காரிகள் சென்னை மாநகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கும் வேளையில், இத்தகைய கொலை குற்றச்செயல்கள் அதிகமாகத் தலையெடுத்து இருக்கின்றன.
சென்னையிலும் புறநகர்ப் பகுதியிலும் சேர்த்துப் பார்த்தால் கடந்த ஆறு நாட்களில் எட்டுக் கொலைகள் அரங்கேற்றப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலவரம் மிகவும் கவலை தருகிறது என்று ஓய்வு பெற்ற போலிஸ் அதி காரியான எஸ் அரவிந்தன் என் பவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்தச் சம்பவங்களை அடுத்து போலிஸ் சுற்றுக்காவல்கள் அதி கரிக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!