சாத்தூர் ராமச்சந்திரன்: திமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்

சாத்தூர் ராமச்சந்திரன்: திமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்

2 mins read
701eee30-a3cb-44e2-8b4e-042bcf0f710b
-

விருதுநகர்: நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலும் சட்ட மன்ற இடைத்தேர்தலும் திமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருக்கும் என்று திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன் னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். "இந்தத் தேர்தலில் வெல்லும் நோக்குடன் நாம் பணியாற்ற வேண்டும். தேர்தலில் வென்றால் தான் திமுகவுக்கு எதிர்காலம் இருக்கும். இல்லை எனில் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கு இல்லாமல் போய்விடும். அதனால் வெற்றிக்கு நாம் ஓய் வின்றி உழைக்க வேண்டும்," என்று அவர் எச்சரித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், அக்கூட்டணி யின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ராமச்சந்திரன், "மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் திமுக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை மக்க ளிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டம் ஆளுங்கட்சிக் கூட்டமாக இருக்கும்," என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னாள் அமைச்சரும் திருச் சுழி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வுமான தங்கம் தென்னரசு பேசுகை யில், "தமிழக முதல்வரின் பிரசா ரத்தைக் கேட்க ஒருவரும் இல்லை. மக்கள் தெளிவான முடிவுக்கு வந்துவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது. "2004ஆம் ஆண்டிலும் இது போன்று கூட்டணிக் கட்சியினர் இதே மேடையில் அமர்ந்திருந் தனர். அப்போது நாற்பது தொகுதி களிலும் வென்றோம். இம்முறையும் அது நடக்கும்," என்றார். அத்துடன், இந்தியப் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார், அதை எதிர்த்துக் கேட்டால் இங்கு வாயில் சுடுகிறார்கள் என்றும் அவர் சாடினார்.