சென்னை: வாக்காளர்களுக்குக் கொடுக்க கள்ளத்தனமாகப் பணம் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டிய பறக்கும் படை அதிகாரிகளே மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது. எந்த ஆவணமும் இன்றி ரூ.50,000 வரை எடுத்துச் செல்ல விதி அனுமதிக்கிறது. இந்நிலையில், ஆவடியைச் சேர்ந்த ஜெய் குகன் 49,700 ரூபாயுடன் சென்றபோது, வழி மறித்த பறக்கும் படைக் குழு அதில் ஐயாயிரம் ரூபாயைத் தரும்படி மிரட்டியுள்ளது. ஜெய் குகன் மறுத்ததால் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சென்றதும் ரூ.25,000 தரும்படி போலிசார் மிரட்டி உள்ளனர். ஆயினும் அசராத ஜெய் குகன் 'தற்கொலை செய்துகொள்வேன்' என மிரட்டியதும் விடுவிக்கப்பட்டார். இது பற்றி அவர் புகார் அளித்ததை அடுத்து, தொடர்பு உடைய அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டது.
பணம் பறிக்கும் படையாக மாறிய பறக்கும் படை
1 mins read

