அழகிரி: திமுகவில் மாற்றம் வரும்

ஜனநாயகம் இல்லாத திமுக விரைவில் மாற்றம் காணும் என்று அக்கட்சியிலிருந்து சில ஆண்டு களுக்கு முன்பு விலக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், “கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை. கட்சிப் பணி செய்யாத பலர் இப்போது பதவி பெற்று இருக்கிறார்கள. இந்த மோசமான சூழ்நிலை விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று பேசினார். 
 இவரது இந்தக் கருத்து மக்களவைத் தேர்தலில் திமுக வாக்கு வங்கியைப் பதம் பார்க்கும் என்று கருதப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon