நடுவானில் விமானத்திற்குள் கூச்சலுடன் ஆர்ப்பாட்டம்

நடுவானில் விமானத்திற்குள் கூச்சலுடன் ஆர்ப்பாட்டம்

2 mins read
0b53fbb1-de41-4d81-a694-51a0e9c5942c
-
Google News Preferred Icon

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரைச் சூட்டக்கோரி நடு வானில் விமானத்திற்குள் ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டதால் விமா னத்திலிருந்த பயணிகளும் விமான ஊழியர்களும் அதிர்ச்சி யடைந்தனர். சென்னையிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 12.55 மணிக்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் பாரதிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் முருகன்ஜி தலைமையில் 12 பேர் ஏறினர். விமானம் திருச்சியைக் கடந்த போது திடீரென்று தங்களது இருக்கையில் இருந்து எழுந்த அவர்கள், முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலை யத்துக்கு வைக்கக் கோரி உரத்த குரலில் முழக்கம் எழுப்பினர். இருக்கையில் அமர்ந்து அமைதி காக்குமாறு விமான ஊழியர்கள் கேட்டுக்கொண்ட போதிலும் அவர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். அதனைத் தொடர்ந்து விமானத்திற்குள் போராட்டம் நடப்பதை சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு அந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் மதுரை வந்தடைவதற்கு முன்பே மதுரை காவல் கண்காணிப்பாளர் மணி வண்ணன் தலைமையில் சிறப்புப் பிரிவினர் மதுரை விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். சரியாக 2.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் விமானம் இறங்கியதும் காவல் துறையினர் பயணிகள் அனை வரையும் பாதுகாப்பாக ஓர் அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், பாதுகாப்பு விதிகளை மீறி விமானத்திற்குள் போராட்டம் செய்ததாக 8 பேரை அவர்கள் கைது செய்து அழைத்துச் சென் றனர். கைது செய்யும்போதும் அவர்கள் முழக்கம் எழுப்பினர். எஞ்சியவர்கள் பயணிகளோடு வெளியேறிவிட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர் களை போலிசார் தேடி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. மதுரை விமான நிலையத் துக்கு முத்துராமலிங்க தேவ ரின் பெயரை சூட்டக்கோரி கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு அமைப்புகள் இக்கோரிக் கையை வலியுறுத்தி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பில் மாநி லங்களவையிலும் விவாதம் நடத் தப்பட்டுள்ளது.