சென்னை: இந்து மத கடவுளான கிருஷ்ணரையும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தையும் இணைத்து திராவிட கழகத் தலை வர் வீரமணி அண்மையில் வெளி யிட்ட ஒரு காணொளி அரசியல் களத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. கிருஷ்ணரை வழிபடும் இந்துக் கள், வீரமணிக்கு எதிராகவும் அவரை ஆதரிக்கும் திமுக கூட் டணிக்கு எதிராகவும் மாநிலத்தின் பல இடங்களிலும் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பல ரும் திமுக கூட்டணிக்கு வாக் களிக்கவேண்டாம் என்று கோரி வருகிறார்கள். தேர்தல் வாக்களிப்பு நெருங்கி வரும் வேளையில், வீரமணியின் இத்தகைய காணொளி காரணமாக தங்களுக்கு 10% வரை வாக்கு இழப்பு ஏற்படலாம் என்றும் அந்த வாக்குகள் அதிமுகவுக்குப் போய் விடக்கூடும் என்றும் திமுக தரப்பு அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. வீரமணியை ஓரங்கட்டும்படி திமுக தலைவருக்கு நெருக்குதல் கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கட்சியின் பல நிலை தலைவர்களும் வீரமணி காணொளியால் ஏற்படும் பாதிப்பு பற்றி திமுக தலைவர் ஸ்டாலினி டம் எடுத்துக் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வீரமணி பேச்சு: வாக்கு போச்சு என திமுக கூட்டணி அச்சம்
1 mins read

