வைகோ: பாஜக திணித்த ஜிஎஸ்டி காரணமாக தமிழ்நாட்டில் 50,000 தொழிற்சாலைகள் மூடல்

வைகோ: பாஜக திணித்த ஜிஎஸ்டி காரணமாக தமிழ்நாட்டில் 50,000 தொழிற்சாலைகள் மூடல்

2 mins read

ஈரோடு: பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசாங்கம் இந்தி யாவில் அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக தமிழ் நாட்டில் 50,000 தொழிற்சாலை களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டார். மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தியை ஆதரித்து அந்தத் தொகுதியில் பல இடங்களிலும் வாக்கு வேட்டையாடிய வைகோ, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என்று உறுதி கூறிய பிரதமர் மோடி, 2,000 பேருக்குக்கூட வேலை வாய்ப்பை வழங்கவில்லை என்று குறை கூறினார். அதேபோல வீட்டுக்கு வீடு ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும் என்று கூறிய பிரதமர், வெறும் 15 ரூபாயைக் கூட கொடுக்கவில்லை என்று வசைபாடிய வைகோ, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் இதுவரையில் நிறைவேற்றவே இல்லை என்று குறிப்பிட்டார். ஜிஎஸ்டி வரி விதிப்பு காரண மாக சிறு, குறு தொழில்கள் அறவே முடங்கிவிட்டதாகவும் தமிழகத்தில் 50,000 தொழிற் சாலைகள் மூடப்பட்டதால் 500,000 பேர் வேலை இழந்து தவிப்பதாகவும் மதிமுக தலைவர் தெரிவித்தார். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இதர பல வகைகளிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ் சித்து வருகிறது என்றார் வைகோ. மத்திய அரசு இப்படி இருக்கை யில், தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்று கூறிய வைகோ, தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைக் காக்காமல் மத்திய அரசுக்கு கைக் கூலியாக அதிமுக அரசு இருக் கிறது என்றார். இந்தத் தேர்தலில் ஜனநாயகம் நிலைக்குமா? பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா? என்பதுதான் கேள்வி என்றார் வைகோ.