பாஜக வேட்பாளர்களைவிட ஓபிஎஸ் மகனுக்கு மோடி முக்கியத்துவம்

பாஜக வேட்பாளர்களைவிட ஓபிஎஸ் மகனுக்கு மோடி முக்கியத்துவம்

2 mins read

தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 13ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். பாஜகவின் மூத்த தலைவர்கள் போட்டி யிடும் தொகுதிகளுக்குச் செல்லாமல் மோடி பன்னீரின் புதல்வருக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கண்டு அதிமுக, பாஜகவினர் பெரும் வியப்பில் ஆழ்ந்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுகவுக்குப் பிரச்சினை ஏற்பட்டபோது ஓ. பன்னீர் செல் வம் மத்திய அரசுக்குத் தோதாக நடந்து கொண்டு பிரதமர் மோடியுடன் நெருக்க மான உறவை ஏற்படுத்திக்கொண்டதே மோடியின் தேனி வருகைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ரவீந்திரநாத் குமாரை எப்படியும் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதற்காக கூடு மானவரை அனைத்து முயற்சிகளும், நட வடிக்கைகளும் அரங்கேற்றப்படுகின்றன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மோடி தேனிக்கு வருகிறார் என்றும் கூறப் படுகிறது. மோடியின் தேனி வருகையும் தேனியில் மோடியின் முழக்கமும் தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்று அதிமுகவினரும் பாஜகவினரும் எதிர்பார்த்து காத்து இருக் கிறார்கள். தேனி தொகுதியில் ரவீந்திரநாத் செல் லும் இடமெல்லாம் அவருக்கு வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து பேரா தரவு அளித்து வருவதாகக் கட்சியினர் கூறுகிறார்கள். ரவீந்திரநாத் கைக்குழந்தை களுக்குப் பெயர் சூட்டி பலரையும் கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், சனிக்கிழமை தேனி அருகே ஒரு பகுதியில் ரவீந்திரநாத் வரு கையை அறிந்து பெண்கள் ஆரத்தியுடன் காத்திருந்தபோது திடீரென்று தீ காற்றில் பரவி பக்கத்தில் இருந்த ஒரு மூதாட்டியின் தலையில் பற்றிவிட்டது. உடனடியாக அங் கிருந்தவர்கள் தீயை அணைத்துவிட்டனர். இவ்வேளையில், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இன்று திறக்கப்பட இருந்த அதிமுக தலைமை அலுவலகம் திடீரென்று சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரியத் தொடங்கிய சம்பவம் பற்றி போலிசார் பலரிடத்திலும் பல கோணங்களிலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.