கட்டுக்கட்டாகப் பணம்; வேலூரில் தேர்தல் நடப்பது கேள்விக்குறி

கட்டுக்கட்டாகப் பணம்; வேலூரில் தேர்தல் நடப்பது கேள்விக்குறி

1 mins read
e93a7c9d-fe3a-47d9-a4a3-b6a83a575708
-

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகளில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளராகக் களமிறக் கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த வெள் ளிக்கிழமை இரவு அவரது வீட் டிற்குச் சென்று வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பத்து லட்ச ரூபாய் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை, உதவியாளர் அஸ்கர் அலி, திமுக ஒன்றியச் செயலாளர் பெருமாள் ஆகியோ ரது வீடுகளில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதில் அஸ்கர் அலி வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற் றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், சிமென்ட் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனை யில் சாக்குமூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப்பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 கோடி பணத்தை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர் (படம்). இதையடுத்து, வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என் பதை மத்திய தேர்தல் ஆணை யமே முடிவுசெய்யும் என்று தமி ழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இதனிடையே, தமது வீட்டில் சோதனை நடத்தத் தடைவிதிக் கும்படி சென்னை உயர் நீதிமன் றத்தில் கதிர் ஆனந்த் முறையிட்டுள்ளார்.