பொள்ளாச்சி விவகாரம்: போலிஸ் அதிகாரி பாண்டியராஜன் இடமாற்றம்

பொள்ளாச்சி விவகாரம்: போலிஸ் அதிகாரி பாண்டியராஜன் இடமாற்றம்

1 mins read

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் கொடுமை பற்றி புகார் அளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை எஸ்.பி பாண்டியராஜன் பணியிடம் மாற்றப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். கோவை மாவட்ட புதிய எஸ்.பி ஆக சுஜித்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டது.