சுடச் சுடச் செய்திகள்

40 லட்சியம், 37 நிச்சயம்: அமமுக தினகரன் சத்தியம்

நாமக்கல்:  தமிழ்நாட்டில் நாடாளு மன்றத் தேர்தலில் 40 தொகுதி களிலும் வெல்வது அமமுகவின் லட்சியம் என்றும் அந்தக் கட்சி 37 தொகுதிகளில் வெல்வது நிச் சயம் என்றும் தான் இப்படி சொல் வது சத்தியம் என்றும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாமக்கல் தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார். 
அதிமுகவின் பெரும் தலைவி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதன்முதலாக சென்னை ஆர்.கே நகரில் நடந்த இடைத் தேர்தலில் இந்தியாவே வியக்கும் அளவிற்குப் பெரும் வாக்கு எண் ணிக்கையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்ற தினகரன், இந்தத் தேர்தலில் புதிய பரிசுப்பெட்டி சின் னத்துடன்  தன் கட்சியை எல்லா தொகுதிகளிலும் தனித்தே களம் இறக்கி இருக்கிறார். 
இந்தத் தேர்தலோடு அதிமுக ஆட்சி முடியப்போகிறது என்றும் ‘உயர்திரு பரிசுத்தம்’ என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள் ளும் பிரதமர் மோடி, ஊழல் கறை படிந்த அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தது ஏன் என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார். 
அண்மையில் இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளைச் செய்தவர்கள் யார் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவர்களை ஆதாரங் களுடன் வரும் மே மாதம் 23ஆம் தேதிக்குப் பிறகு அம்பலப்படுத்தப் போவதாகவும் தினகரன் மிரட்டல் விடுத்தார். 
அமமுகவில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இருப்பதாகவும் அதிமுகவில் ‘டெண்டர்கள்தான்’ இருக்கிறார்கள் என்றும் தெரி வித்த தினகரன், கல்லாப்பெட்டி களை வீட்டுக்கு அனுப்ப பரிசுப் பெட்டிக்கு வாக்களிக்கும்படி கேட் டுக்கொண்டார். இத்தேர்தலில் அமமுக தனித்து நின்றாலும் அதனுடைய பிரசாரம் மிகவும் எடுப்பாக இருக்கிறது என்று பல தரப்பினரும் தெரிவிக்கிறார்கள். 
வாக்களிப்பு நெருங்க நெருங்க எப்படியும் தங்களுக்கு ஒரு பரிசுப் பெட்டி கிடைக்க இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் பல வாக்காளர் கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
இந்த நிலையில், அமமுகவினர் ஹீலியம் பலூன்களைப் பறக்க விடுவது, பரிசுப்பெட்டிகள் விநி யோகம் முதலான பல புதுப் புது வழிகளில் பிரசாரம் செய்து வரு கிறார்கள். 
பரிசுப்பெட்டிகளை ஆவலுடன் பிரித்துப்பார்க்கும் மக்கள், உள்ளே ஒன்றும் இல்லாததைக் கண்டு திகைப்படைந்து வந்தாலும் அதை விநியோகிப்பவர்கள் தங்களைப் பார்த்து செய்யும் மர்மப் புன்னகை மூலம் வாக்காளர்களிடம் உற்சாக மும் நம்பிக்கையும் ஏற்பட்டு வருவ தாகக் கூறப்படுகிறது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon