பாச மழையில் பாச மலர்கள்...

பாச மழையில் பாச மலர்கள்...

1 mins read
a439bca5-17bd-4b63-b7d6-0b7e20ee7db7
-

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிள்ளைகளை மாநிலத்தின் பல பகுதிகளிலும் தமிழக மக்கள் மிகவும் வாஞ்சையுடன் வரவேற்று கொஞ்சி மகிழ்வதைக் காண முடிகிறது. தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, பாச மழையில் நனைந்துவருகிறார். இந்தத் தொகுதியில் ஒரு கிராமத்துக்குப் போன கனிமொழி கன்னத்தைத்தொட்டு ஒரு பாட்டி திருஷ்டி கழித்ததைக் கண்டு தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களோடு மக்களாகக் கலந்து பிரசாரம் செய்கிறார். கிருஷ்ணகிரியில் ஒரு தேநீர் கடைக்குச் சென்ற ஸ்டாலினின் கன்னத்தைத் தொட்டு 'என் ராசா' என்று ஒரு மாது கொஞ்சியது மனதைத் தொட்டது. படங்கள்: தமிழக ஊடகம்