குவைத்தில் தமிழக ஊழியர் கொலை; இரு இந்தியர்கள் கைது

குவைத்தில் தமிழக ஊழியர் கொலை; இரு இந்தியர்கள் கைது

1 mins read

ஐதராபாத்: குவைத்தில் தமிழ கத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இதன் தொடர்பில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இருவரில் ஒருவர், ஆந் திராவைச் சேர்ந்தவர், மற்றொருவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இருவரும் கொல்லப்பட்ட நபருடன் ஒரே அறையில் குடியிருந்தனர். ஒரே அறையில் தங்கியிருந்த ஆறு பேரும் குவைத் குடும்பம் ஒன்றுக்கு ஓட்டுநர்களாக பணி யாற்றினர் என்று தகவல்கள் தெரி விக்கின்றன. சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் சில பிரச்சி னைகள் காரணமாக மூவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது மற்ற மூவர் அறையில் இல்லை. வாக்குவாதம் முற்றியதால் தமிழக ஊழியரான குமாரை சந்தேக நபர்கள் இருவரும் மாறி மாறி தாக்கியதாகக் கூறப்படு கிறது. குமாரை அவர்கள் கத்தியால் குத்தியதாகவும் சொல்லப்படு கிறது. சம்பவத்துக்குப் பிறகு இரு சந்தேக நபகர்களும் முதலாளியை அழைத்து குமாரைப் பற்றி தெரி வித்தனர். சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் வந்தபோது குமார் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந் தார். அவரை மீட்ட காவல்துறையினர் ஃபார்வானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். சந்தேக நபர்கள் மொய்னூடின், இம்ரான் என அடையாளம் காணப் பட்டுள்ளது. எட்டு மாதங்களாகவே மூவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. ஆனால் தற்போது வாக்கு வாதம் முற்றி கொலையில் முடிந் துள்ளது. ரிக்கா காவல் நிலையத் தில் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.