நடிகர் கார்த்திக் பிரசாரம்

நடிகர் கார்த்திக் பிரசாரம்

1 mins read
b32fe059-cbee-444c-9e54-da4e9cc09dde
-

சென்னை: நடிகர் கார்த்திக், அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கியுள்ளார். மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதன் பிறகு அதிமுக கூட்டணி கட்சி வேட் பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாக அவர் அறிவித்தார். அதன்படி நாளை தூத்துக்குடியில் பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பேசுகிறார். பின்னர் நெல்லை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், தென்சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.