ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு தாய் விஜயலட்சுமி பிரசாரம்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு தாய் விஜயலட்சுமி பிரசாரம்

1 mins read

தேனி: துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடு கிறார். அமமுக சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் களத்தில் உள்ளார். வலிமையான மும்முனைப்போட்டியால் தேனி தொகுதியில் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக அவரின் தாயும் ஓபிஎஸ் மனைவியுமான விஜயலட்சுமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேபோல ஓபிஎஸ் குடும்பத்தினர் கம்பத்தின் முக்கிய வீதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.