சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தின் மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டு 15 நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு ஒரத்த நாட்டில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது திடீரென பறந்து வந்த காலணி முதல்வரின் வேன் மீது விழுந்தது. முதல்வர் மீது காலணி படவில்லை. ஆனால் உடன் இருந்த வைத்திலிங்கத்தின் கையில் பட்டு வேன் மீது விழுந் தது. இதனால் அதிமுக தொண் டர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதிமுகவினர் காலணி வீசியவரை வளைத்துப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இந்த நிலையில் காவல் துறை யினர் அந்த வாலிபரை மீட்டு கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில் உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் அவர் என்பது தெரிய வந்தது. சமையல் கலை படித்துள்ள வேல்முருகன், காலணி வீசும் நோக்கத்தோடு அதிமுக கரை வேட்டியை அணிந்து வந்துள்ளார். மேலும் வேல்முருகன், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன் னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றிய ஆவணங்களை வைத்து உள்ளதாக வேல்முருகன் குடும்பத்தார் காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் வேன் மீது காலணி வீசியவர் சிறையில் அடைப்பு
1 mins read
-

