டிடிவி தினகரன்: சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த அரசு திட்டம்

டிடிவி தினகரன்: சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த அரசு திட்டம்

1 mins read
b6055a36-65e9-47df-981b-0e001d92886e
-

ஊட்டி: வருமான வரித்துறையின் சோதனையைப் பயன்படுத்தி 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிடுவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டி யுள்ளார். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நீலகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக செய்தியாளர் களிடம் அவர் பேசினார். "இந்தத் தேர்தலில் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். "வருமான வரித்துறை சோதனை மூலம் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு வரு கின்றன. இது தொடர்பாக விளக்கிய தினகரன், "ஆளும் கட்சி படு தோல்வி அடையும் என்பதால் குறிப்பாக எங்கள் வேட்பாளர்கள் மீதோ, அல்லது அவர்கள் சம் பந்தப்பட்டவர்கள் மீதோ, எங்கள் கட்சி நிர்வாகிகள் வீடுகளிலோ, அல்லது எங்கள் கட்சி பொறுப்பாளர்களின் வீடுகளி லோ, இவர்கள் போய் முன்ன தாகவே பணத்தை வைத்துவிட்டு அதன் பிறகு எங்கள் ஆட்களை பிடித்து, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்கலாம். "தேர்தல் ஆணையமும் உடனே தேர்தலை நிறுத்த நட வடிக்கை எடுக்கலாம். எனவே இந்த தேர் தலில் மத்திய மாநில அரசுகள் அனைத்து அதிகார துஷ்பிரயோகங்களையும் மேற் கொள்ள வாய்ப்பு உள்ளது," என்று கூறினார்.