சென்னை: எஸ்.விஜயன் என்பவர் 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் நேற்று வெளியிடப் படும் என அறிவிக்கப்பட்டிருந் தது. ஆனால் தேர்தல் விதி அமலில் இருப்பதாகக் கூறி, 'ரபேல் பேர ஊழல்' புத்த கத்தை வெளியிடுவதற்கு ஆயிரம் விளக்குத் தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷ் தடை உத்தரவு பிறப்பித்ததால் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் புத்தகத்தைப் பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்தார். தற்போது தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' புத்தகத்தை 'இந்து' ராம் வெளியிட்டார். தேர்தல் ஆணையம் தடை விதித்ததால் இந்தியா முழுவதும் இப் புத்தகம் பிரபலமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
தடையை மீறி வெளியானது 'ரபேல் பேர ஊழல்'
1 mins read
-

