டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கவும்

டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கவும்

1 mins read
f8373779-e99f-48f6-9a7e-5f72e0074d6d
-

மதுரை: தமிழகத்தில் பல்வேறு குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ள டிக்-டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்கவேண்டும். அந்தச் செயலியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காணொளிகளைத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது. குழந்தைகளின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இணையத்தள சட்டத்தை அமல்படுத்துவது குறித்து வருகிற 16ஆம் தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று‚மதுரையில் பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.