130 மாணவர்களின் பட்டங்கள் செல்லாது; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு

130 மாணவர்களின் பட்டங்கள் செல்லாது; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு

2 mins read

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், 130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என்று அண்ணா பல் கலைக் கழகம் அறிவித்துள்ளது. அவர்களின் பட்டங்களையும் அது ரத்து செய்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடந்த செமஸ்டர் தேர்வுகளின்போது அலுவலக உதவியாளர்களாக தற் காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் துணையுடன் தில்லு முல்லுகள் நடந்தன. மாணவர்கள், 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில் ஓரிரு பக்கங்கள் மட்டும் எழுதிவிட்டு, தேர்வு முடிந்து ஓரிரு நாட்களுக்குப் பின்னர் அலுவலக உதவியாளர்கள் உதவியுடன் மற்ற பக்கங்களில் சரியான விடைகளை எழுதி தாட் களைத் திருப்பி ஒப்படைத்தனர். இதற்காக 15,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவியாளர்கள் பெற்றனர். இந்த முறைகேடு பற்றி விசா ரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், பல் கலைக்கழகத்தில் பணியாற்றிய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியாகி, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த முறைகேடு களில் ஈடுபட்ட 130 மாணவர்களின் பட்டத்தை ரத்து செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறி வித்துள்ளது. அவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பல மாணவர்கள் பல பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அவற்றை நிலுவையில் வைத்திருப்பதாகவும் அவற்றில் தேர்ச்சி அடைந்த பிறகு மீண்டும் அந்த மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. பட்டங்களை ரத்து செய்து பல்கலைக்கழகம் எடுத்து உள்ள முடிவு பரபரப்பாகி உள்ளது.