முக்கியமான மக்களவைத் தொகுதி முடிவுகளில் பெரும் பாலானோர் எதிர்பார்க்கும் தூத்துக்குடியில் கனிமொழி (படம்) வாகை சூடுவார் என்றும் திருநெல்வேலியில் அதிமுக வெல்லும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரியில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் எட்டு தொகுதி களில் இழுபறி நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருப்பூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி ஆகியன அந்த எட்டு தொகுதிகள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த முதல்வராக யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு ஸ்டாலின் என்று 33 விழுக் காட்டினரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் என்று 22 விழுக்காட்டினரும் டிடிவி தினகரன் என்று 20 விழுக்காட்டினரும் கமல்ஹாசன் முதல்வராக 7 விழுக்காட்டினரும் கருத்துக் கூறியுள்ள னர். பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு ராகுல் காந்திக்கு 35.7 விழுக்காட்டின ரும் மோடிக்கு 27 விழுக்காட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ள னர். அதிமுக அரசு தாக்குப் பிடிக்க மத்திய அரசின் உதவி தான் காரணம் என்று 59% வாக்காளர்கள் கூறியுள்ளனர்.
கனிமொழி வெற்றி பெறுவார்; எட்டு தொகுதிகளில் இழுபறி
1 mins read
-

