வாக்காளர் எண்ணிக்கை 61.05 லட்சம் கூடியது

வாக்காளர் எண்ணிக்கை 61.05 லட்சம் கூடியது

1 mins read

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்கள் எண் ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. அதன்படி பிப்ரவரியில் புதிதாக எட்டு லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். இந்தத் தேர்தலில் 2.95 கோடி ஆண்கள்; 3.02 கோடி பெண்கள்; 5,790 திருநங்கையர்; 66,112 சேவை வாக்காளர்கள் என மொத் தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2014 நாடாளுமன்றத் தேர்தலை விட 61.05 லட்சம் வாக்காளர்கள், 2016 சட்டசபைத் தேர்தலைவிட, 19.66 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். மாநிலத்தில் சென்ற நாடாளு மன்றத் தேர்தலின்போது, 2.68 கோடி ஆண்கள்; 2.68 கோடி பெண்கள், 2,999 திருநங்கையர்; 68,160 சேவை வாக்காளர்கள் என மொத்தம் 5.38 கோடி வாக்காளர் கள் இருந்தனர். வாக்காளர் பட்டியலில் 1.95 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன.