தேர்தல் பணிகளில் 3.37 லட்சம் பேர்

தேர்தல் பணிகளில் 3.37 லட்சம் பேர்

2 mins read
c420001d-faaa-4b10-b213-f64f0e768043
-

சென்னை: தமிழ்நாட்டில் ரூ. 414 கோடி செலவில் நாடாளுமன்றத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. ஏறக் குறைய 6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருக்கும் அந்த மாநிலத்தில், இம்மாதம் 18ஆம் தேதி நடக்கவிருக்கும் வாக்குப் பதிவையும் அடுத்த மாதம் நடக்க விருக்கும் வாக்குகள் எண்ணிக் கையையும் ஒட்டி தேர்தல் பணி களில் 336,533 பேர் ஈடுபட இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் ஆண் வாக்காளர்களைவிட சுமார் 500,000 பெண் வாக்காளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக் கது. தமிழ் நாட்டில் 39 நாடாளு மன்றத் தொகுதிகளில் 835 வேட் பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 779 பேர் ஆண் கள். மாநிலம் முழுவதும் 67,820 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படு கின்றன. மாற்றுத் திறனாளிகள் லட்சக் கணக்கில் இருப்பதால் அவர்களின் தேவைகளை நிறை வேற்றவும் சிறப்பு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. பாதுகாப்பில் துணை நிலை ராணுவத்தினரும் சிறப்பு போலிஸ் படையினரும் பெரும் எண்ணிக் கையில் ஈடுபடுத்தப்பட இருக் கிறார்கள். 167,932 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் சுமார் 5,000 இயந்திரங்களும் பயன்படுத்தப் பட இருக்கின்றன. களத்தில் பெரும் பணக்கார வேட்பாளர்கள் அதிகமாக இருப்ப தால் தொகுதிகளில் வேட்பாளர் களின் செலவும் அதிகரித்து இருக்கிறது. வேட்பாளர்கள் மொத்தம் ரூ. 10,000 கோடி பணத்தைத் தண்ணீராகச் செலவிட இருக்கிறார்கள் என்று ஒரு கணக்குக் கூறுகிறது. கள்ள பணப்புழக்கத்தைத் தடுக்க ஏற்கெனவே ஏராளமான அதிகாரிகளும் காவலர்களும் பணிகளில் பிரித்துவிடப்பட்டு இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வாகனங் கள் தேர்தல் பணிகளில் ஈடு படுத்தப்படுகின்றன. தமிழ்நாட் டில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க இருப்ப தால் அதற்கான ஏற்பாடுகளை யும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டி இருக்கிறது.