திசைதிருப்பும் தீர்ப்பு

சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச் சாலைத் திட்டம் தொடர்பாக வெளியாக இருக் கும் தீர்ப்பு அதிமுக அணியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு 10 நாட்கள் முன்னதாக தீர்ப்பு வெளியாக இருப்பதால் அந்த அணியைச் சேர்ந்த வேட்பாளர் கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு அனுமதி அளிக் கும் வகையில் அரசுக்குச் சாத கமாக தீர்ப்பு வெளியானால் சம் பந்தப்பட்ட ஐந்து மாவட்டங்களை யும் சேர்ந்த வாக்காளர்களில் பெரும்பாலானோர் அதிமுக -பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்பதே அந்தத் தவிப்புக்குக் காரணம்.
குறிப்பாக, இந்தத் திட் டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்த தருமபுரி எம்.பி. அன்பு மணி ராமதாசின் வெற்றி யைக்கூட தீர்ப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே மக்களவைத் தேர்தல் தீர்ப்பைக் காட்டிலும் இந்த தீர்ப்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
10,000 கோடி ரூபாய் செல வில் எட்டுவழிச் சாலை அமைக்க சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இவ்வாறு செய்தால் பல்லாயிரக் கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயி களின் வாழ்வாதாரம் பறிக்கப் படும் என்று எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. மேலும் ஐந்து மாவட்ட விவசாயிகள் நடத்திய பல போராட்டங்கள் காவல்துறையால் ஒடுக்கப்பட்டன.
இந்நிலையில், நில உரிமை யாளர்கள் சிலரும் பூவுலகின் நண்பர்கள் என்னும் இயக்கத் தினரும் நிலம் கையகப்படுத்த லுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தனர். நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுவை விசாரித்து நிலங்களைக் கை யகப்படுத்த தடை விதித்தது. இவ்விவகாரத்தில் பதிலளித்த மத்திய அரசு, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சு ஒப்புதல் வழங் கினால் மட்டுமே எட்டு வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப் படும் என உறுதியளித்திருந்தது.
கிட்டத்தட்ட ஆறு மாதங் களாக விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில் எல்லாத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது. நாளை திங்கட்கிழமை அந்தத் தீர்ப்பு வெளியாக உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!