இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) இந்திய வெளியுறவுச் சேவை (ஐஎஃப்எஸ்) உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான யுபி எஸ்சி தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 39 பேர் மட்டுமே தேர்வு பெற்றுள்ளது அதிர்ச்சியை எற் படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு 42 பேர் இந்த மாநிலத்தில் தேர்ச்சி பெற்றனர். அதற்கு முந்திய ஆண்டுகளிலும் இந்த எண் ணிக்கை அதிகமாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் ஆகக் குறைவான தேர்ச்சி இப் போதுதான் நிகழ்ந்துள்ளது என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப் பிடுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. அதில் தேறியவர் களுக்கு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து 120 பேர் இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் 4 லட்சத்து 93 ஆயிரத்து 972 பேர் விண் ணப்பித்தனர். அதில், 10 லட்சத்து 65 ஆயிரத்து 552 பேர் முதல்நிலை தேர்வை எழுதினர். அவர்களில், 10,468 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். அதில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு 1,994 பேர் சென்றனர். மேலும், முதல் 25 இடங்களில் 15 பேர் ஆண்கள் மற்றும் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திறன் காணும் தேர்வுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இறுதி முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 759 பணியிடங்களுக் குரியவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதன்படி இத்தேர்வு முடிவில், மும்பை ஐஐடியில் பிடெக், பட்டம் பெற்றுள்ள கனிஷாக் கட்டாரியா என்ற இளைஞர் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத் தலை நகர் போபாலைச் சேர்ந்த சுருஸ்தி ஜெயந்த் தேஷ்முக் என்ற பி.இ. பட்டதாரி பெண் பெண்கள் பிரி வில் முதலிடம் பிடித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வு: பத்தாண்டுகளில் குறைவான தேர்ச்சி
2 mins read

