மதுரை: திமுக ஆட்சியில் இருந்த போது மர்மமாக நடத்தப்பட்ட கொலைகள் அத்தனையும் மீண் டும் விசாரிக்கப்படும் என்று முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரி வித்துள்ளார். மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராஜ் சத்யனை ஆத ரித்து கோ.புதூரில் பொதுக்கூட் டம் நடந்தது. மாநகரச் செயலாளர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில் முதல்வர் பழனி சாமி பேசுகையில், "அதிமுக கூட் டணி ஆதரிக்கும் பாஜக மத்தி யில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்குத் தேவையான திட் டங்களைப் பெற்று மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். "தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம் பரம் நிதி அமைச்சராக இருந்தார். ஆனால், அவரது சொந்த சிவ கங்கை தொகுதிக்கும் தமிழகத் துக்கும் எதுவும் செய்யவில்லை. திமுக தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை. விவசாய நிலத்தைக் காப்பாற்றவில்லை என என்னைப் பார்த்து ஸ்டாலின் குறை சொல் கிறார். அவர்களது ஆட்சியில் பொதுமக்களிடம் நிலத்தை மிரட்டிப் பிடுங்கினார்கள். "அதன் பிறகு அதிமுக ஆட் சிக்கு வந்தவுடன் திமுகவினரிட மிருந்து நிலத்தை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஜெயலலிதா ஒப்படைத்தார். தற்போது மதுரை மக்கள் நிம்மதியாக உள்ளனர்.
திமுக ஆட்சியில் மர்ம கொலைகள்
1 mins read

