சுடச் சுடச் செய்திகள்

கோவில் கடை: அரசு தடையாணை ரத்து

புதுடெல்லி: கோவில் வளாகங் களில் உள்ள கடைகளை அகற்று வது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நிகழ்ந்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றவேண் டும் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து  கடைகளை அகற்றவும் கெடுவிதித்தது. 
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. 
தொடர்ந்து குமாரும் வியாபாரி களும் உச்ச நீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணைக்கு இடைக் கால தடை விதித்தது. 
வழக்கில் மனுதாரர்கள், இந்து அறநிலையத்துறை, தமிழக அரசு ஆகிய தரப்புகள் வாதிட்டன.
கோவில்களில் கடை வைத்து பிழைப்பு நடத்தும் கடைக்காரர் களின் கருத்துகளைச் செவிமடுப் பதற்குத் தமிழக அரசு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்டது.  
இந்து அறநிலையச் சட்டம் 1959ன் அடிப்படையில், கோவில் களில் செயல்படும் கடைகளை அப்புறப்படுத்த பல நடைமுறைகள் இருக்கின்றன.
அந்த நடைமுறைகளின் அடிப் படையில் கடை உரிமையாளர் களின் கருத்துகளைச் செவி மடுக்க தமிழக அரசாங்கம் வாய்ப்பு அளித்திருக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 
பலதரப்பு வாதங்களையும் செவிமடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கோவில் கடைகளை அப்புறப்படுத்துவதற்குத் தமிழக அரசு பிறப்பித்து இருக்கும் உத்தரவைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தனர்.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon