அம்பை: தஞ்சை, சென்னை அருங்காட்சியகங்களில் உள்ள 2,000 சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க அரசு அனு மதிக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை சிறப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோயிலில் கடந்த 1982ம் ஆண்டு திருட்டு போன சிலைகள் குறித்து போலிசில் புகார் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து பொன்.மாணிக்கவேல் நேற்று கல்லிடைக் குறிச்சிக்கு வந்து குலசேகரமுடையார் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.
2,000 சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைப்பதற்கு வலியுறுத்து
1 mins read

