366 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

366 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

1 mins read

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அரசின் உரிய அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட 366 தனியார் பள்ளிகளுக்குக் கடந்த பிப்ரவரியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இப்பள்ளிகளுக்குத் தலா 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது. பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு 2 மாத கால அவகாசம் கொடுத்திருந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை தற்போது மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.