சிறைச்சாலையில் நடைபெற்ற சந்திப்பு: கைதிகளுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள்

சென்னை: சிறைவாசம் அனுப வித்து வரும் கைதிகளை நீதிபதி கள் சந்தித்து ஆலோசனையும் அறிவுரையும் வழங்கிய நிகழ்வு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. இது கைதிகளின் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும், அவர்கள் திருந்தி மறுவாழ்வு பெற இந்த நிகழ்வு  ஒரு உந்துசக்தியாக அமையும் என்று சமூக ஆர்வலர் கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள புழல் மத்திய சிறையில் முதன் முறையாக குற்றம் செய்து சிறை வாசம் அனுபவிக்கும் கைதிகளை நீதிபதிகள் சந்தித்துப் பேசினர். புழல் மத்திய சிறை மற்றும் விசா ரணை சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள் ளனர். இவர்களில் முதன்முறையாக குற்றம் செய்து சிறைக்கு வந்துள் ளவர்களின் எண்ணிக்கை கணிச மாக உள்ளது.
இவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நீதிபதிகளுடன் கலந்தாய்வு நிகழ்வு ஒன்றை நடத்த சிறைத்துறை முடிவு செய்தது.
அதன்படி, அண்மையில் நடை பெற்ற இந்நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இவர்கள் ஆலோசனை வழங்கினர்.
முதன்முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டு சிறைக்கு வந் துள்ள அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தலைமை டிஐஜி கனகராஜ், முருகேசன், துணை ஆணையர் ரவளி பிரியா புனேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தண்டனை வழங்குவதோடு நீதிபதிகளின் கடமை முடிந்து விட்டது என்று விட்டுவிடாமல், முதல்முறையாகக் குற்றம் செய்து தண்டனை பெற்ற சிறைக் கைதி கள் தொடர் குற்றவாளிகளாக மாறாமல் தடுத்து, அவர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். 
அதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon