அமமுக அலுவலகத்தில் ரூ. 1.5 கோடி பறிமுதல்

அமமுக அலுவலகத்தில் ரூ. 1.5 கோடி பறிமுதல்

1 mins read
f7d74654-4221-46b9-9ebc-84012e6c5c6b
-

தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வருமானத்துறை அதிகாரிகள் அமமுக அலுவலகத்தில் ரூ. 1.5 கோடி பணத்தைப் பறிமுதல் செய்ததாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் தொடர்பில் 150 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

சோதனை நேரத்தில் அமமுக தொண்டர்களுக்கும் போலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அத்துடன், போலிசார் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்வதைத் தடுக்க அந்தத் தொண்டர்கள் முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சோதனை நடவடிக்கையில் அமமுக மாவட்டத் துணைச்செயலாளர் பழனி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கிருந்த வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.