திடீர் மழை, மின்னல்: 14 பேர் காயம்; சூறை காற்றில் ஏராள மரங்கள் சேதம்

திடீர் மழை, மின்னல்: 14 பேர் காயம்; சூறை காற்றில் ஏராள மரங்கள் சேதம்

1 mins read

வேதாரண்யம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை பெய்துள்ளது. கோவையில் பல பகுதிகளிலும் சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் பலத்த மழை பெய்தது. வேதாரண்யத்தில் நேற்று அதிகாலையில் 3 மணிக்கு ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் திடீரென மழை பெய்து ஒரு சில கூரை வீடுகளில் மின்னல் தாக்கியதில் காயம் அடைந்த 14 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதில் ரூ.10 கோடி மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்தன என்று தெரிவிக்கப்பட்டது.