ரஜினி: சட்டமன்றத் தேர்தலில் போட்டி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்ப தாக நடிகர் ரஜினிகாந்த் தெரி வித்துள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் ஜெய லலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவை அடுத்து தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள் ளதாகப் பரவலாகப் பேசப்பட்டது. அவ்விடத்தை நிரப்பும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரு டைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ரஜினி யும் 2017 டிசம்பர் மாதத்தில் அரசியலுக்குள் நுழைவதாக அறி வித்தார்.
முதற்கட்டமாக, தமது ரசிகர் மன்றங்களை 'ரஜினி மக்கள் மன்றங்களாக' அவர் மாற்றினார். அதைத் தொடர்ந்து, ரஜினி ரசி கர்கள் அனைவரையும் அம்மன் றத்தில் உறுப்பினர்களாக இடம் பெறச் செய்யும் பணிகளும் மாநி லம் முழுவதும் உள்ள 60,000 'பூத் கமிட்டி'களுக்கு ஆட்களை நியமிக்கும் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
அரசியலில் இறங்குவதாக அறிவித்தபோதும் புதுக் கட்சி தொடங்குவது எப்போது என் பதை இன்னமும் ரஜினி அறி வித்தபாடில்லை.
அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி போட்டியிட வில்லை என்பதால் அவரது ஆதரவைப் பெற பாஜக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் முயன் றன. ஆனால் இன்னாருக்கு ஆதரவு என ரஜினிகாந்த் வெளிப் படையாக எதையும் கூறவில்லை. மாறாக, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 'நதிநீர் இணைப்பு' அம்சத்தை வரவேற்ப தாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, நேற்று முன் தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்ததும் 'அடுத்த தேர்தலில் ரஜினி போட்டியிடுவார்' என்ற நம்பிக்கையில் அவருடைய ரசி கர்கள் டுவிட்டர் சமூக ஊடகத் தில் '#அடுத்த ஓட்டு ரஜினிக்கே' என்ற ஹேஷ்டேக்கை உருவாக் கினர். அந்த ஹேஷ்டேக் பெரும் வரவேற்பைப் பெற்று இந்திய அளவில் 'டிரெண்டிங்'கில் முதல் இடம்பிடித்தது.
இந்த நிலையில், மும்பையில் 'தர்பார்' படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி வாக்களிப்பதற் காக சென்னை சென்றார். வாக் களித்தபின் மீண்டும் படப்பிடிப் பிற்காக நேற்று மும்பை கிளம்பிய அவர் அதற்குமுன் செய்தியாளர் களைச் சந்தித்து பேட்டி கொடுத் தார்.
அப்போது, "எனது அரசியல் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கும் ரசிகர் களைக் கண்டிப்பாக ஏமாற்ற மாட்டேன். தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்," என்று ரஜினி உறுதிபடத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது. இன்னும் நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது. அவற்றில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் பட்சத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்.
அப்படி ஏதேனும் நடந்தால் உடனடியாகக் கட்சியை அறிவிப் பீர்களா என்று கேட்டதற்கு, "முடிவு வரட்டும், பார்க்கலாம்," என்று ரஜினி பூடகமாக பதில் கூறினார்.
முந்தைய தேர்தல்களைக் காட் டிலும் இம்முறை தேர்தல் வன் முறைகள் குறைவுதான் எனக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் அதிகமாகப் பணம் விளையாடி இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் அதற்குத் தேர்தல் ஆணையமே தீர்வுகாண வேண் டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2021ஆம் ஆண் டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்க இருப்பதாக இதற்கு முன்னரும் ரஜினி கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!