மயிலாடுதுறை: நெய்வேலியிலிருந்து சரக்கு ரயில் ஒன்றை தெற்கே ஓட்டிச் சென்ற ஓட்டுநர் முத்துராஜா என்பவர், தனது 12 மணி நேர வேலை நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் வழியிலேயே ரயிலை நிறுத்திவிட்டார். ரயில் குறுக்கே நின்றதால், அப்பகுதியின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பிறகு ஓட்டுநர் அருகே உள்ள மயிலாடுதுறை ரயில் நிலையம் வரை ரயிலை ஓட்ட இணங்கியதை அடுத்து நிலைமை சீரடைந்தது. வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் தண்டவாள கடப்பில் நிற்கும் சரக்கு ரயில் வண்டி. படம்: தமிழக ஊடகம்
வேலை நேரம் முடிந்தது என்பதால் ரயிலை பாதியிலேயே நிறுத்தினார்
1 mins read
-

