நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம் 

சேலம்: குட்டி குரைத்து நாய் தலை யில் வைத்ததைப்போல சேலம் பகுதியில் தெரு நாய் ஒன்று 62 பேரைக் கடித்துக் குதறியதால் மருத்துவமனை,  மாநகராட்சி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக் கும் இடையில் பெரும் பிரச்சினை மூண்டது.
இந்தச் சம்பவம் சேலம் மாந கரில் தெருநாய்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவேண்டிய ஒரு நிலையை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 
சேலம் நகருக்குள் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக வும் காலை நேரத்தில் உடற்பயிற் சிக்காக நடப்பவர்களை எல்லாம் அந்த நாய்கள் கடித்துக் குதறிவிடு வதாகவும் பல ஆண்டுகளாகவே மாநகராட்சிக்கு ஏராளமான மக்கள் புகார் தெரிவித்து இருந் தும் மாநகராட்சி உருப்படியான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. 
இந்த நிலையில், வெறிபிடித்த தெரு நாய் ஒன்று நேற்றுக் காலை நேரத்தில் சாலையில் நடந்துசென்ற வர்கள், கடையில் நின்றுகொண் டிருந்தவர்கள், வீடுகளுக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர் கள் என மொத்தம் 62 பேரை ஓடிஓடி கடித்துவிட்டது. 
அவர்கள் ரத்தம் சொட்டசொட்ட உறவினர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி னார்கள். ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் சிகிச்சைக்கு வந்ததை யடுத்து மருத்துவமனை நிர்வாகம் நாய்க் கடிக்குப் போதிய அளவுக்கு மருந்து இல்லை என்று கூறியதாக வும் அதனால் பாதிக்கப்பட்டவர் கள் மருத்துவமனையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக வும் ஊடகத் தகவல்கள் கூறின.
இந்த முற்றுகை நடந்துகொண் டிருந்தபோதே மேலும் பலரும் நாய்க்கடி சிகிச்சைக்காக மருத் துவமனைக்கு ஓடிவந்து பரிதவித் தனர். இந்நிலையில், பிரச்சினை பெரிதாகிவிட்டதை அறிந்த சேலம் மாநகராட்சி நிர்வாகத்தினர், அந்த வெறி நாயைப் பிடிப்பதற்காக விரைந்து சென்றனர். 
அவர்கள் சென்றபோது ஒரு சந்தில் நின்றுகொண்டிருந்த அந்த நாய், மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பேரையும் கடித்துவிட்டு ஓடிவிட்டது. 
அங்கு திரண்டு இருந்த பொது மக்கள் மாநகராட்சி ஊழியர்களு டன் வாய்த் தகராறில் ஈடுபட்டு பல முறை புகார் தெரிவிக்கப்பட்டும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் போனதால் இப்போது இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்று ஊழியர்களை நோக்கி சத்தம் போட்டனர். 
இந்நிலையில், பொதுமக்களில் சிலர், சேலம் நகரில் பட்டைக் கோயில் என்ற பகுதியில் அந்த வெறி நாயைக் கண்டு அதை விடாமல் துரத்திச்சென்று அடித்தே அந்த நாயைக் கொன்றுவிட்டனர். அதை மாநகராட்சி நிர்வாகம் பிறகு அப்புறப்படுத்தியது. 
சேலத்தில் தெருநாய்த் தொல்லை அதிகமாக இருப்பதால் நிர்வாகம் உடனே தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் இப்போது உரத்த குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. 
படம்: ஊடகம்