சிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு

சென்னை: அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பை, சிலம்பம் விளை யாட்டுக்கான தேசிய விளையாட்டு சம்மேளனமாக அங்கீகரிக்குமாறு மத்திய, மாநில அரசுக்கு உத்தர விடும்படி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக் கல் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியா மற்றும் தேசிய விளை யாட்டுப் போட்டிகளில் சிலம்பத்தை யும் ஒரு போட்டியாகச் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கும்படியும் மத்திய, மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கும்படி அந்த மனு நீதி மன்றத்தைக் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
அகில இந்திய சிலம்பம் கூட் டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் அந்த மனுவை இந்தக் கூட்டமைப் பின் தலைமைச் செயலாளர் பி. ஐரின் தாக்கல் செய்தார்.
அந்த மனு, நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. மனு தொடர்பில் ஆறு வார காலத்திற்குள் பதிலளிக் கும்படி மத்திய இளையர், விளை யாட்டுத் துறை அமைச்சு, மாநில அரசாங்கம், இந்திய ஒலிம்பிக் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கு நீதிபதி உத்தர விட்டார்.
சிலம்பம் என்பது இந்தியாவின் தற்காப்புக் கலை என்றும் அது தமிழ்நாட்டில் தோன்றியது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்திலும் சங்க காலத்தைச் சேர்ந்த இதர இலக் கியங்களிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும் சிலம்பம், இரண்டாவது நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதையும் ஏறக்குறைய எல்லா தெற்கு ஆசிய நாடுகளிலும் அந்தக் கலை நடப்பில் இருந்து வந்துள்ளது என்பதையும் இந் தோனீசியா போன்ற நாடுகளிலும் அந்தக் கலை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் மனுதாரி சுட்டிக் காட்டி இருக்கிறார்.
சிலம்பத்தைத் தடை செய்யப் பட்ட விளையாட்டாக பிரிட்டிஷ் அரசு பல ஆண்டு காலம் அறி வித்து இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் சிலம்பத்தைத் தற்காப்புக் கலையாகவும் விளை யாட்டாகவும் பலரும் மேம்படுத்தத் தொடங்கினர் என்பதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!