சுடச் சுடச் செய்திகள்

சென்னையில் ஏராள வீடுகளில் கஞ்சா: போலிஸ் சோதனை

சென்னை: சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க 100க்கும் மேற்பட்ட வீடுகளில் போலிசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
போலிசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து செயலில் இறங்கிய அதிகாரிகள், ஒரு வீட்டில் கஞ்சாவைச் சிறு சிறு பொட்டலங்களாக மடித்துக் கொண்டிருந்த ஒன்பது பேரைக் கைது செய்து சுமார் ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதே பகுதியிலுள்ள மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். 
கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனமும் காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon