வீட்டை இடித்தது யானை: 7 பேர் தப்பினர் 

கோவை: கோவை ஆனைகட்டி சேம்புக்கரை கிராமத்தில் வனத்தி லிருந்து வெளியேறிய ஒரு யானை நேற்று அதிகாலை ஒரு வீட்டை உடைத்தது. 
வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த ஏழு பேர் வேறு ஒரு அறைக்கு ஓடி பதுங்கி உயிர் தப்பினர். 
“ஆனைகட்டி வனத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மக்னா என்ற ஒற்றை யானை அடிக்கடி உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்கிறது. 
“இப்போது யானை, உணவு தேடி வீட்டை உடைத்து உள்ளது. யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று யானை தாக்குதலில் இருந்து உயிர் தப்பியோரில் ஒருவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon