இன்று நிழல் இல்லா நாள்

இன்று நிழல் இல்லா நாள்

1 mins read

சென்னை: தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிழல் இல்லா நாள் வருவதையொட்டி, அது குறித்த அறிவியல் நிகழ்வைக் கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே சூரியன் நம் நேர் உச்சிக்கு வரும். ஓர் இடத்திலுள்ள பொருளின் நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளே 'நிழல் இல்லா நாள்' எனப்படுகிறது.