மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 42 கன அடியாகச் சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியும் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
1 mins read

