மின்னல் வெட்டி 10 பேர் படுகாயம்:  இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று   வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    
மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக நிலவும் கடும் வெப்பத்தை ஓரளவுக்குத் தணிக்கும் வகையில் சில இடங்களில் கடந்த சில நாட்களில் திடீர் மழை பெய்தது. சூறைக்காற்றும் வீசியது. குன்னூர் அருகே சின்னாளக்கம்பை கிராமத்தில் மின்னல் தாக்கி கர்ப்பிணி உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். சாலை வசதி இல்லாததால் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற முடியாமல் தவித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.