சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் மூன்றாவது வளாகத்தில் உள்ள இரண்டாவது தளத்தில் மருந்து, சாதன அறையில் நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் தீ மூண்டது. 30க்கும் அதிக நோயாளிகள் வேறு அறைக்கு உடனே மாற்றப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்தில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. இரண்டாவது தளத்தின் முகப்பில் இருந்த கண்ணாடிகள் முழுவதும் சேதம் அடைந்தன. படம்: தமிழக ஊடகம்
தனியார் மருத்துவமனையில் தீ
1 mins read

