திருவிழாவில் பெருங்கூட்டம்: நெரிசலில் சிக்கி எழுவர் பலி

திருவிழாவில் பெருங்கூட்டம்: நெரிசலில் சிக்கி எழுவர் பலி

1 mins read

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி எழுவர் பரிதாபமாக உயிரிழந்தனர். துறை யூர் அருகே முத்தையம்பாளையத் தில் பிரபல கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு சித்ரா பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது நாளில் பிடி காசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் சில்லறைக் காசுகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தக் காசை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல் வம் பெருகும் என்ற நம்பிக்கையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். பிடிகாசு களைக் கோயில் பூசாரி பக்தர் களுக்கு வழங்கிக்கொண்டிருந்த போது பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளியதில் கீழே விழுந்து பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட் டது. ஒருவரை ஒருவர் மிதித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே எழுவர் உயிரிழந்தனர்; பத்துப் பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்கள் துறையூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.