திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரின் 16 வயது பையன் தனநாராயணன் வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர். அவர் மார்ச் 24ல் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டார். உடலை மீட்ட மருத்துவ அதிகாரிகள், பையன் இறந்துவிட்டதாகச் சொல்லி உடலை குடும்பத்தாரி டம் ஒப்படைத்தனர், இந்நிலையில் அந்தப் பையன் சாகவில்லை என்று ஒரு சாமி யார் கூறியதை அடுத்து ஜீவ சமாதி நிலையில் பையனின் உடல் அடக்கம் செயப்பட்டதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியது. இது பற்றி கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிகாரி கள், இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடக்கும் என்றனர்.
சிறுவன் ஜீவசமாதியால் பரபரப்பு
1 mins read

