புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவியர் நேற்று பகல் 12:14 மணி தொடங்கி 12.17 வரை நீடித்த அரிய நிழல் இல்லாத நாளைக் கண்டு மிகவும் ரசித்தனர். சூரியன் செங்குத்தாக வரும் போது ஓர் இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண் டுக்கு இருமுறை பூஜ்ஜியமாக ஆகிவிடும். அந்த நாளே நிழல் இல்லா நாள் என்று குறிப்பிடப் படுகிறது. புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் துறையும் அறிவியல் இயக்கம் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த 20 இடங்களில் இதனைப் பள்ளி மாணவர்கள் கண்டு ரசித்தனர்.
மாணவ, மாணவியர் ரசித்த 'நிழல் இல்லாத நாள்'
1 mins read

