ஜீவசமாதி: பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுக்கப்பட்டது

ஜீவசமாதி: பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுக்கப்பட்டது

1 mins read

கண்ணமங்கலம் அடுத்த செண்பகத்தோப்பு ராமநாதபுரத் தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரின் 16 வயது மகன் தனநாராயணன் வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர். அவர் மார்ச் 24ல் ஒரு கிணற் றில் விழுந்துவிட்டார். உடலை மீட்ட மருத்துவ அதிகாரிகளும் போலிசாரும் பையன் இறந்து விட்டதாகச் சொல்லி உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர், இந்நிலையில், அந்தப் பையன் சாகவில்லை என்று ஒரு சாமியார் கூறியதை அடுத்து ஜீவசமாதி நிலையில் பையனின் உடல் அடக்கம் செயப்பட்டதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் அதிகமாகப் பேசப்பட்டது. அதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பில் சட்டத்துக் குப் புறம்பாக யாரேனும் நடந்திருந் தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.