அரியலூர்: பெண்கள் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரம்பலூர் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்பு டையதாகக் கூறப்படும் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிப் பதிவாளர் தலைமறைவாகி உள் ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த மக்கள வைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, பெரம்பலூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட அறையில், பெண்கள் சிலர் பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்தப் புகார் தொடர்பாக விடுதி ஊழியர்களிடம் போலிசார் விசாரணையை நடத்தி உள்ளனர். மேலும் விடுதியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள், இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதி வாகி உள்ளது.

